கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையை கடைசி நாள் . கடந்தஆண்டை விட அதிக விண்ணப்பங்கள் விண்ணபித்துள்ள நிலையில் நாளை அதிக விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் அம்மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு கடந்த 22ஆம் தேதி வெளியானது. முடிவு வெளியான பின்னர் 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி நாளை (27) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில் நாளை மாலையுடன் அவகாசம் முடிகிறது.