முன்னாள் அமைச்சர் எஸ்.பி .வேலுமணி நண்பர் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
கோவை கோவைப்புதூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் ராஜேந்திரனின் ஜே.ஆர்.டி கட்டுமான நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் ஜே.ஆர்.டி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை மேற்கொண்டு வருகிறது. கோவைப்புதூர் அருகே ஜே.ஆர்.டி நிறுவனம் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உரிய அனுமதியுடன் கட்டப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். எஸ்.பி.வேலுமணியின் நண்பர் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.