இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். வாகை சூட வா நண்பா புத்தகம்
வெளியீடு விழாவில் விருந்தினர்கள் பேசினர்.
கன்னியாகுமரி மாவட்டம் இயல்பாகவே எழுத்தறிவு அதிகம் உடைய மாவட்டம்.
குமரி மாவட்டம் தொழிற்சாலைகளே இல்லாத மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் ஆசிரியர் பணியில் இருக்கும் மாவட்டம் என்பது குமரியின் தனித்த பெருமை.
குமரியில் படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை தேடிச் செல்வது மாநிலத்தின் தலைநகர் சென்னையை நோக்கி தான்.
கலைவாணரும், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் தமிழ் சினிமாவில் கோல் ஓச்சிய கலைஞர்களை பார்த்து சினிமா ஆசையில் அன்றொரு நாள் கையில் வெறும் ரூ.100.00 சினிமா கனவை மட்டும் மனதில் சென்னைக்கு சென்ற பி.டி.செல்வகுமார் முயற்சியில் திரைப்படம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு, அவரது உதவியாளர் என்ற பணியின் தொடர்ச்சியாக திரைப்படத்தில் நடிகனாக அறிமுகமான விஜயின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு,அவரது மேலாளராக பணியாற்றிய பி.டி. செல்வகுமார் பின்னாளில் திரைப்பட தயாரிப்பாளர் என்ற உயர்ந்தவர். ரூ.100 கோடி செலவில் “புலி”என்ற திரைப்படத்தை தயாரித்தவர் மனதில் இந்த சமுகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற பெரும் எண்ணத்தின் விளைவாக “கலப்பை” என்ற இயக்கத்தை தொடங்கிய அந்த காலகட்டத்தில் “கொரோன”என்ற பெரும் தொற்றின் பாதிப்பு இரண்டு ஆண்டுகள் பொருளாதாரத்தின் அடி தட்டு மக்கள் பட்ட இன்னலுக்கு உதவும் எண்ணத்தில் சொந்த ஊர் (குமரி) வந்தவர், அவர் ஈட்டிய செல்வத்தை துன்பப்படும் மக்களுக்கு உதவிய எண்ணத்தின் பாதையில் பி.டி.செல்வகுமாரின் பார்வை பள்ளிக்கூடங்களை நோக்கி திரும்பியதில் அரசு பள்ளிகள் பல வற்றில் சிதலம் அடைந்த வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தவர், அதன் தொடர்ச்சியாக, 5_அரசு பள்ளிகளில் கலயரங்களை இதுவரை கட்டி கொடுத்துள்ளார்.
சிறுவர்கள்,இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டும் கருத்துகளை விலைக்கு எளிய வழி “புத்தகம்”என்பதை உணர்ந்தவர்.
பள்ளி சிறுவர்கள் மனதில் நம்பிக்கை, எதிர் காலத்தை திட்டமிடல் பற்றிய தகவல்கள் அடங்கிய “வாகை சூட வா நண்பா” என்ற புத்தகம். அஞ்சு கிராமத்தில் உள்ள புனித ஸ்டெல்லாஸ் மேல்நிலைப் பள்ளியில். கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் வெளியிட முன்னாள் குமரி மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் சாமிதோப்பு தலைமைபதியை சேர்ந்த பூஜித குரு பாலபிரஜாதிபதி,
பள்ளி தாளாளர் ஜெயின் வில்சன், கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சரோஜா ஆகியோர் புத்தகத்தின் கருத்துகளை மாணவர்கள் மத்தியில் எடுத்து வைத்தனர். பி.டி.செல்வகுமார் ஏற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் நிரைவில 10_ம்,12_ம் தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் வழங்கினார். நிகழ்வில் கலப்பை அமைப்பின் குமரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.