கலை பண்பாட்டுத் துறை(திருநெல்வேலி மண்டலம்) சார்பில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமப்பகுதியில் இன்று முதல் இரண்டு நாட்கள் மாலையில் விழாவாக இன்று மாலை (அக்டோபர்_11)ல் குமரி சங்கமம் விழா தொடங்கியது.
கன்னியாகுமரியில் இன்று தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற, நம்ம ஊரு திருவிழாவில் ஒரு ஆச்சரியமான காட்சி. அரசியல் வாதிகள் யாருமே இல்லாது, ஆட்சியர் அழகு மீனா இ.ஆ.ப., உட்பட அரசு அதிகாரிகள் மட்டுமே அமர்ந்திருந்த மேடை காட்சி ஒரு வித்தியாசமான, அதிசிய காட்சி.!
குமரி ஆட்சியர் குமரி சங்கமம் விழா தொடக்க உறையில் பதிவு செய்த தகவல்கள்.
தமிழகத்தில் முதல்வராக கலைஞர் இருந்த 2007_ம் ஆண்டு சென்னை சங்கமம் என்ற இந்த கலைவிழாவை தொடங்கி வைத்தார். அந்த தொடக்கத்தின் வரிசையில் இன்று நாம் பங்கேற்கிற “குமரி சங்கமம்” விழா. தமிழகத்தில் இந்த விழா 8 முக்கிய நகரங்களில் நம்ம ஊரு திருவிழாவாக நடைபெறுகிறது.
அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை தமிழகத்தில் அழிந்து வரும் நம் பழம் கலைகளின் பெருமையை காப்பாற்றி இனி வரும் நம் சந்ததிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழகத்தின் பழம் பெரும் கலைகள் அழிந்து போகாது காக்கும் அணுகுமுறை. கன்னியாகுமரியில் இந்த விழா நடப்பது பெரும் பொருத்தமாகும். நம்ம ஊரு திருவிழாவில். 375 கலைஞர்கள் பங்கேற்பது என்பது அந்த கலைஞர்களும் பயன் பெற முடிகிறது என்பது பெரும் மகிழ்ச்சி தருகிறது. ஆட்சியர் அழகு மீனா, குமரி வன அலுவலர் பிரசாத் இ.வ.ப.,மண்டல உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தமுக்கு அடித்து தொடங்கி வைத்தார்கள்.
நாட்டுப்புற கலைஞர்களின் பல்வேறு கலைகளை வெளிப்படுத்தினார்கள்.
குமரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் நன்றி கூறினார்.