• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

இன்று அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு

ByA.Tamilselvan

Jul 21, 2022

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதிவியேற்கவுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தார் இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பிறகு, இலங்கையின் இடைக்கால அதிபராகவும் பதவியேற்றார்.
இந்தநிலையில், இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நேற்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார் இதனைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார்.