• Thu. Oct 10th, 2024

ஓபிஎஸ்-ஐ அடுத்து அவர் மகனுக்கும் செக் வைக்கும் எடப்பாடி…

Byகாயத்ரி

Jul 21, 2022

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை தொடர்ந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்.பி. என்ற அந்தஸ்தை பறிப்பதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தள்ளது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, அந்த பொதுதுக்கூட்டத்திலேயே சிறப்பு தீர்மானம் கொண்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கப்பட்டு அந்த பதவி ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர் என்ற அந்தஸ்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் மகன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *