• Sun. Apr 28th, 2024

முதல் தொலைநோக்கி கண்டறிந்த, உலகப் புகழ்பெற்ற வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் நினைவு தினம் இன்று (ஜூன் 26, 1796).

ByKalamegam Viswanathan

Jun 25, 2023

டேவிட் ரிட்டன்ஹவுஸ் (David Rittenhouse) ஏப்ரல் 8, 1732ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பேப்பர் மில் ரன் என்னுமிடத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமையின் காரணமாக முறையாக பள்ளிக்கு செல்ல இயலாத ரிட்டன்ஹவுஸ். கணிதம், இயந்திரங்கள் குறித்து டேவிட் வில்லியம்ஸ் மாமாவிடம் கற்றறிந்தார். அவர் தன்னிடம் இருந்த சில புத்தகங்கள், மாற்றும் பல கருவிகள் அடங்கிய பெட்டியையும் கொடுத்தார். தனது கைத்தொழிலான மரவேலைகளை செய்துகொண்டே அளவற்ற கணிதப் புத்தகங்கள் படித்தவர் நியூட்டனின் ‘பிரின்சிபியா’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அறிவியல் நூல்களைப் படித்து ஆழமான இயற்பியல் அறிவையும், கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் அபாரத் திறனையும் வளர்த்துக்கொண்டார்.

அறிவுக்கூர்மை மிக்க டேவிட், நீர் ஆலையின் மாதிரி ஒன்றை 8 வயதில் வடிவமைத்தார். மேலும், 17 வயதில், முதலில் ஒரு மர கடிகாரத்தையும், பின்னர் ஒரு பித்தளை கடிகாரத்தையும் உருவாக்கினார். தந்தையின் வயலில் ஒரு ஆய்வுகூடத்தை தொடங்கி. அங்கு உயரமான, துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரங்களை தயாரித்து விற்றார். ஜெனித் சுற்றுக்கண்டம் (Zenith Sector), தொலைநோக்கி (Telescope) போன்ற வானியல் ஆய்வுகளுக்கான கருவிகளை உருவாக்கினார். அளவுருக்கள் (Parameters), உலோக உறை வெப்பமானி (Metallik Pocket Thermometer), ஹைக்ரோமீட்டர் (Haikrometers) உள்ளிட்ட கருவிகளையும் தயாரித்தார். இவை 1770-களில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிகம் விற்பனையாகின. பல்வேறு வகையான திசையறி கருவிகளை (Compass) தயாரித்த ரிட்டன்ஹவுசு, வெர்னியர் கண்காணிப்பு திசையறி கருவியையும் (Vernier Tracking Compass) உருவாக்கியவர் என கூறப்படுகிறது. தேசிய பொது நிலங்களை கணக்கெடுக்க, இவரது பெயரிலான ‘ரிட்டன்ஹவுஸ் மேம்படுத்தப்பட்ட திசையறி கருவிகளை’ அரசு பயன் படுத்தியது. இதன் காரணமாக டேவிட் ரிட்டன்ஹவுசை பிலடெல்பியா நகர சர்வேயராக 1774ல் நியமிக்கப்பட்டார்.

வானியல் கண்காணிப்புக்காக அமெரிக்க தத்துவவியல் சங்கம் (American Philosophical Society) ஒருசில இடங்களில் கண்காணிப்பு நிலையங்களை அமைத்தன. இவற்றில் ஒன்று இவரது வீட்டில் அமைக்கப்பட்டது. இந்நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகளை இவர் தனக்காகவும், மற்ற கண்காணிப்பாளர்களுக்காகவும் தயாரித்தார். இதற்காக இவர் தயாரித்த தொலைநோக்கிதான் அமெரிக்காவின் முதல் தொலைநோக்கி என்று கருதப்படுகிறது. டேவிட் ரிட்டன்ஹவுஸ் மற்ற நடுவங்களிலும் வானியல் கண்காணிப்புகளுக்காக கருவிகளைப் பொருத்த உதவி செய்தார். பிலடெல்பியாவில் 1770ல் நிரந்தரமாகக் குடியேறிய அவர், அங்கு மற்றொரு கண்காணிப்பு நிலையம் அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டார். புதன் (Mercury), வியாழன் (Jupiter), யுரேனசு (Uranus) ஆகிய கோள்களின் பாதைகளைக் கண்காணித்த டேவிட், விண்கற்கள், வால்நட்சத்திரங்கள், சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்தும் ஆராய்ந்தார். இதன்மூலம், உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

‘ஆன் ஈஸி மெத்தட் ஃபார் டிடக்டிங் தி ட்ரூ டைம் ஆஃப் தி சன்ஸ் பாசிங் தி மெரிடியன்’ என்ற நூலை வெளியிட்டார். காந்த சக்தி, மின்சாரம் குறித்த சோதனைகளை 1784ல் மேற்கொண்டார். தனது முதல் கணிதக் கட்டுரையை 1792ல் வெளியிட்டார். பல்வேறு அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன. பல்வேறு அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன. படித்துப் பெரிய பட்டங்களைப் பெறாமலேயே தனது திறமையால் பல சாதனை களை நிகழ்த்தியவரும், 18-ம் நூற்றாண்டின் முன்னணி வானிய லாளருமான டேவிட் ரிட்டன்ஹவுஸ் ஜூன் 26, 1796ல் தனது 64வது அகவையில் பென்சில்வேனியா அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Related Post

SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *