• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

உலக புலிகள் தினம் இன்று…

ByAlaguraja Palanichamy

Jul 29, 2022

உலக புலிகள் நாளாக இன்று (ஜூலை 29) கொண்டாடப்படுகிறது. அதனைப் பற்றிய ஒரு தொகுப்பு…

தேசிய சின்னங்கள் நாட்டின் உருவத்தை சித்தரிக்கின்றன மற்றும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேசிய சின்னங்கள் நாட்டையும் அதன் இன கலாச்சாரத்தையும் வரையறுக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு ராயல் பெங்கால் புலியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்து புராணங்களிலும் வேத காலத்திலும் புலி சக்தியின் அடையாளமாக இருந்தது. இது பெரும்பாலும் துர்கா தேவியின் பல்வேறு வடிவங்களின் விலங்கு வாகனமாக சித்தரிக்கப்பட்டது. உலகில் 80 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன. ராயல் பெங்கால் புலி இந்திய நாணயத்தாள்கள் மற்றும் தபால் தலைகளில் இடம்பெற்றுள்ளது.

புலி இந்தியாவின் தேசிய விலங்காக இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு 1948 இல் இந்தியாவின் தேசிய விலங்காக ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு தேசிய விலங்காக சிங்கத்தையே அறிவித்தது. ஆனால், 1973இல் இந்திய வனவுயிர் வாரியம் புலியை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவித்தது. அதன் காரணம் சிங்கம் குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் மட்டுமே இருந்தது. புலிகள் நாடு முழுவதும் காடுகளில் பரவி வாழ்கின்றன.

இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. ஆனால் இன்று புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது 100 ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு 3200 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 3 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 1,706 புலிகள் உள்ளன. அடுத்ததாக, மலேசியாவில் 500 புலிகள் காணப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால் தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லையெனில் காடுகளின் வளம் குறையும். புலிகள் சராசரியாக 15 ஆண்டுகளும் அதிகபட்சமாக 17, 18 ஆண்டுகளும் உயிர் வாழும். பெண் புலி, தனது குட்டியை இரண்டாவது வயதிலேயே துரத்திவிட்டுவிடும். புதிதாக பிறக்கும் குட்டிகளுக்கு வாழ்விடங்கள் தேவை. எனவே, வாழ்விடச் செழுமையைப் பொறுத்தே புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கோவை வனக் கோட்டத்தில் புலிகள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.

2016-ல் உலக காடுகள் நிதியம் கணக்கெடுப்புபடி 3,891 புலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கும்.

2014ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் 22 மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் 2,226 புலிகள் வாழ்ந்து வந்தன. அதற்கு முன்பு 2010 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட எண்ணிக்கையான 1,706ஐ விடவும் இது அதிகம்.

2006 இல் 1411 புலிகள் மட்டுமே இந்தியாவில் இருந்தன. அவ்வாறு இடமாற்றம் செய்யும்போது, புலிகள் கொண்டு விடப்படும் புதிய காட்டில் அங்கு இதற்கு முன்பு புலிகள் வாழ்ந்தபோது நிலவிய அதே இயற்கைச்சூழல் நிலவுகிறதா, புலிக்குத் தேவையான போதிய வளங்கள் அங்கு உள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டும். அப்படி இல்லாத காட்டில் விடப்படும் புலிகள் இரை தேடி காட்டைவிட்டு வெளியே வந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களைக் கொல்லும் வாய்ப்புண்டு.

உலகிலேயே மலைப் பகுதியில் புலிகள் அதிக அளவு இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தான். அதிலும் குறிப்பாக, ஒரே வாழ்விடத்தில் புலிகள் அதிகம் இருப்பது, நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில்தான். தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம், கேரள மாநிலத்தில் வயநாடு, மன்னார்க்காடு, அமைதிப்பள்ளத்தாக்கு, கர்நாடகத்தின் பந்திப்பூர், நாகர்கொளே பகுதிகளை உள்ளடக்கியதுதான் நீலகிரி உயிர்க்கோள காப்பகம்.உலகப் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளது!! ஒருங்கிணைந்த அங்கம் என்பதோடு, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, இயற்கையின் விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தீவனங்கள், வனப்பகுதிகளிலேயே கிடைக்கச் செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. மேலும் அதிகப்படியான தமிழ்நாட்டு தமிழ்நாடு அரசின் மற்றும் மத்திய அரசு மனங்களில் வாழும் புலிகளுக்கும் மற்ற விலங்கினங்களுக்கும் தீவனங்கள் பற்றாக்குறை ஏற்படாத வனம் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் இந்தியா வெளிப்படுத்தி வரும் மென்மையான போக்கின் ஒரு வகை தான் புலிகள் மற்றும் பிற வன உயிரினங்கள், என்று திரு.பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். குறைந்த அளவிலான நிலப்பரப்பு போன்ற பல்வேறு தடைகள் இருப்பினும், இந்தியாவின் உயிர்ப்பன்மை 8 சதவீத அளவிற்கு உள்ளதாகவும், இயற்கை, மரங்கள் மற்றும் வன உயிரினங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் இருப்பது தான் இதற்குக் காரணம் என்றும் தெரிகிறது.

70% புலிகள் இந்தியாவில் உள்ளது. வன உயிரினங்கள் இயற்கை நமக்கு உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பது (India accounts for 70% of world’s tigers) பெருமைக்குரியது என்றார். விலங்குகளின் உயிரிழப்புக்குக் காரணமான மனிதன் – விலங்குகள் மோதலால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ள, விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தீவனங்கள், வனப்பகுதிகளிலேயே கிடைக்கச் செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும் மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைந்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காடுகளின் வாழும் விலங்கினங்கள் காட்டு வளங்களையும் பாதுகாக்கும்.

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இந்த உரையில் கால்நடை பராமரிப்பு தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன அதில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் அவர்களின் 200 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்கள். மேலும், கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ.1,314 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த பட்ஜெட் ஒதுக்கீடு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.