• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 25, 2021

பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி ராணி வேலுநாச்சியார்.

இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகளாக, 1730 ஜன., 3ம் தேதி பிறந்தவர், வேலு நாச்சியார். கல்வி, சிலம்பம், வாள்வீச்சு, அம்பு விடுதல், குதிரை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளையும் கற்றறிந்தார்.

1746ல், 1780-ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலைக் கைப்பற்றியது. சிவகங்கையில் வேலு நாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு,

தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர் தான்! கடந்த, 1796 டிச.,25ல் தன் 66வது வயதில் இயற்கை எய்தினார்.வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று!