தமிழக விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு இன்று கடைசிநாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம் மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளும் உள்ளன.
விளையாட்டு விடுதிகளில் ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செயற்கையும் நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே 23ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய 7401703480, 044-26644794 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.