தமிழகத்தில் ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.