குரூப் 1 தேர்வுக்கு விண்ணபிக்க இன்று கடைசிநாள் ஆகும்.தேர்வர்கள் இணையதளம் மூலமாக விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்நிலையில், துணை ஆட்சியர் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறவிட்டவர்கள் இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.