• Tue. Mar 25th, 2025

புதிய பால் பாக்கெட்டை விற்பனைக்கு இறக்கிய ஆவின்

Byகாயத்ரி

Aug 22, 2022

ஆவின் வாயிலாக தினந்தோறும் 49 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது 3 தரங்களாக பிரிக்கப்பட்டு 3 நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் 3 முறை பால் விலை குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் தனியார் பால் விலை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஹோட்டல்களுக்கும் ஆவின் பால் அதிகளவில் வாங்கப்படுகிறது. விற்பனை அதிகரித்தாலும் மறுபுறம் கொள்முதல் குறைந்துள்ளது.

இருப்பினும், குறைந்த விலை காரணமாக ஆவின் நஷ்டத்தில் சிக்கியுள்ளது. எனவே இதை சமாளிக்க வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்காக ‘டீ மேட்’ என்ற பெயரில் ஒரு லிட்டர் பால் பாக்கெட் விற்பனைக்கு வரவுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த இது சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது.