• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு நினைவு நாள்

ByKalamegam Viswanathan

May 9, 2023

விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய, அமெரிக்க வானியலாலர் லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு நினைவு நாள் இன்று (மே 9, 1970).
லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு (Louise Freeland Jenkins) ஜூலை 5, 1888ல் மசாசூசட்டில் உள்ள பிட்சுபர்கில் பிறந்தார். 1911ல் மவுண்டு கோலியோக் கல்லுரியில் பட்டம் பெற்றார். இவர் அதே நிறுவனத்தில் 1917ல் வானியலில் முதுவர் பட்டம் பெற்றார். 1913ல் இருந்து 1915 வரை பிட்சுபர்கில் உள்ள அல்லிகேனி வான்காணகத்தில் பணிபுரிந்தார். பின்னர், இவர் மவுண்டு கோலியோக் கல்லூரியில் 1915 முதல் 1920 வரை பயிற்றுநராக இருந்தார்.

ஜென்கின்சு 1921 ஆம் ஆண்டளவில் ஜப்பானுக்குச் சென்று மகஇர் கிறித்தவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1925ல் மீண்டும் தன் தந்தையார் இறந்த்தும் அமெரிக்காவுக்கு வந்தார். ஓராண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மீண்டும் வந்து கிமேயியில் உள்ள கினமாட்டோ கோகுவென் சிறுமியர் உயர்நிலைப்பள்ளி சேர்ந்தார். ஜென்கின்சு 1932ல் அமெரிக்காவுக்கு வந்து, யேல் பல்கலைக்கழக வான்காணகத்தில் புலவுறுப்பினராகச் சேர்ந்தார். இவர் வானியல் இதழின்( Astronomical Journal) இணையாசிரியராக 1942ல் இருந்து 1958 வரையில் பணியாற்றி உள்ளார். இவர் தன் வாழ்நாளின் கடைசியில் மீண்டும் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளார்.

இவர் அண்மையில் உள்ள விண்மீன்களின் கோணவியல் இடமாறு தோற்றப் பிழை ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். இவர் மாறும் விண்மீன்களைப் பற்றியும் ஆய்வு செய்தார். இவர் சூரியனில் இருந்து 10 பார்செக் தொலைவுக்குள் அமைந்த விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கினார். மேலும், யேல் பொலிவுமிகு விண்மீன்களின் வானியல் அட்டவணையையும் திருத்தம் செய்தார். விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு மே 9, 1970ல் தனது 82வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.