ஜெர்மானிய உயிரி வேதியலறிஞர் ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 12, 1884).
ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் (Otto Fritz Meyerhof) ஏப்ரல் 12, 1884ல் ஹன்னோவரில், பணக்கார யூத பெற்றோரின் மகனாகப் பிறந்தார். 1888 ஆம் ஆண்டில், அவரது குடும்பம் பேர்லினுக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஓட்டோ தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியைக் கழித்தார். அங்கு அவர் மருத்துவப் படிப்பைத் தொடங்கினார். ஹைடெல்பெர்க்கில் ஆய்வுகளைத் தொடர்ந்து “மன நோயின் உளவியல் கோட்பாட்டிற்கான பங்களிப்புகள்” என்ற தலைப்பில். 1909ல் பட்டம் பெற்றார். ஹைடெல்பெர்க்கில், அவர் ஹெட்விக் ஷாலன்பெர்க்கை சந்தித்து, 1914ல் திருமணம் செய்து கொண்டனர்.
1912ம் ஆண்டில், ஓட்டோ மேயர்ஹோப் கியேல்க்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் பல்கலைக்கழகத்தில் 1918ல் பேராசிரியராகப் பெற்றார். தசைத் திசுக்கள் ஆக்சிஜனை எவ்வாறு உறிஞ்சி அதை லேக்டிக் அமிலமாக மாற்றுகிறது, தசைகள் சுருங்கும்போது கிளைகோஜன்கள் எவ்வாறு லாக்டிக் அமிலமாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்தார். 1922 ஆம் ஆண்டில், கிளைகோலிசிஸ் உள்ளிட்ட தசை வளர்சிதை மாற்றத்தில் பணியாற்றியதற்காக அவருக்கு ஆர்கிபால்ட் விவியன் ஹில் உடன் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டில் அவர் கைசர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் ரிசர்ச்சின் இயக்குநர்களில் ஒருவரானார்.
நாஜி ஆட்சியைத் தவிர்த்து, அவர் 1938ல் பாரிஸுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அவர் 1940ல் அமெரிக்காவிற்குச் சென்றார், அங்கு பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் விருந்தினர் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கிளைகோலிசிஸ் ஆய்வுக்கு அவர் அளித்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, யூகாரியோட்களின் பாதைக்கான பொதுவான தொடர் எதிர்வினைகள் எம்ப்டன்-மேயர்ஹோப்-பர்னாஸ் பாதை என அழைக்கப்படுகின்றன. தசைத் திசுக்கள் ஆக்சிஜனை உறிஞ்சி லேக்டிக் அமிலமாக மாற்றுகிறதை கண்டுபிடித்த, ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் அக்டோபர் 6, 1951ல் தனது 67வது அகவையில் பிலடெல்பியா அமேரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.