• Tue. May 30th, 2023

ஆ.பூவராகம் பிள்ளை பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Nov 27, 2021

தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தவர் ஆ.பூவராகம் பிள்ளை. சிதம்பரத்தில், 1899 நவம்பர் 27ல் பிறந்தார். அங்குள்ள ராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியை துவக்கினார். பின், அண்ணாமலை பல்கலை தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றினார்.

இலக்கணத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார்.தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு, எளிய நடையில் உரை எழுதி, ‘சேனாவரையர் உரை விளக்கம்’ என்ற நுாலை வெளியிட்டார்.வைணவம் தொடர்பாக, பல மாநாடுகளை நடத்தினார். தொல்காப்பியம் நுாலை பதிப்பித்தார்.

‘புலவர் பெருமை, திருவாய்மொழி விளக்கம், திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி’ உள்ளிட்ட நுால்கள் எழுதியுள்ளார். 1973 மே- 28ல், தன் 74வது வயதில் இயற்கை எய்தினார்.
இத்தகைய இலக்கண அறிவாசிரியர் ஆ.பூவராகம் பிள்ளை பிறந்த தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *