• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆர்-ன் நினைவு தினம் இன்று..!

Byகாயத்ரி

Dec 24, 2021

தமிழ் நாட்டில் இவரை அறியாத ஆளும் இல்லை இவர் செய்யாத நற்செயல்களும் இல்லை. அவர் தான் எம். ஜி. ஆர். மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர்.தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.எம்.ஜி.சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.

காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.இவரின் ஆளுமைக்கே பல கோடி ரசிகர்கள்…அப்போ இவரின் படத்திற்கு எவ்வளவு ரசிகர்களின் ஆதரவு கிடைத்திருக்கும் என்று சற்று யூகித்து பாருங்கள்.

உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்ற இவரை கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.இவர் புகுத்திய திட்டங்கள் அனைத்தும் இன்று வரை பேசக்கூடிய ஒன்றாகும்.இத்தகைய எழுச்சிமிகு அரசியல்வாதியாகவும் மக்களின் சேவகனாகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆர்-ன் நினைவு தினம் இன்று..!