• Fri. Apr 26th, 2024

கக்கன் நினைவு தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 23, 2021

விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவர் கக்கன்.மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில், 1908 ஜூன் 18ல் பிறந்தார்.

தாழ்த்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த இவரை, மதுரை வைத்தியநாத அய்யர் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றார். காங்., – எம்.பி.,யாக, 1952 முதல் 1957 வரை பதவி வகித்தார். காமராஜருக்கு பின், தமிழக காங்கிரஸ், தலைவராக பொறுப்பேற்றார்.

பொதுப்பணி, ஹரிஜன நலவாழ்வு, விவசாயம், உள்துறை, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டார். மேட்டூர், வைகை அணைகள், இரண்டு விவசாய பல்கலைகள், லஞ்ச ஒழிப்புத் துறை, கூட்டுறவு விற்பனை கூடங்கள் என, ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தினார். கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை, வீடூர் அணைகள் கட்டப்பட்டன.நேர்மையின் உதாரணமாக திகழ்ந்தார்.முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, 1981 டிசம்பர் 23ல், தன் 73வது வயதில் உயிரிழந்தார். கக்கன் நினைவு தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *