• Fri. Apr 19th, 2024

இன்று ஒரு நாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு!!

ByA.Tamilselvan

Sep 11, 2022

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை அடுத்து இன்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் அடுத்த இரண்டு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி மறைவை தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் எலிசபெத்தின் மறைவையொட்டி இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இன்று அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *