• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சிக்கு வரி செலுத்த. ஜனவரி 20 கடைசி நாள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி குடிநீர் வரி கடை உரிமம் குப்பை வரி போன்றவற்றை செலுத்த தவறியவர்களுக்கு ஜனவரி இருபதாம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என வாகனம் மூலம் ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதியில் 15 வார்டுகள் உள்ளன இதில் வணிக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் தேயிலை தொழிற்சாலைகள் வீடுகளுக்கு செலுத்தப்பட வேண்டிய தொழில்வரி சொத்து வரி குடிநீர் வரி குப்பை வரி வருகின்ற ஜனவரி 20க்குள் கட்டப்பட வேண்டும் என கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி மூலமாக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றது