• Tue. Dec 10th, 2024

நாள்தோறும் இரவில் சாலையில் உலாவரும் சிறுத்தையால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூரி ,குந்தா பாலம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் அப்பகுதி மக்களிடம் பதட்டமும் ,அச்சமும் ஏற்பட்டுள்ளது. சிறுத்தையைவிரைந்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் குந்தா அணை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது .குந்தா மின் நிலையம் கனடா பவர் ஹவுஸ் குந்தா பாலம் குந்தா மேல் முகாம் பகுதிகளில் மின் ஊழியர்களின் வீடுகள் அரசு பள்ளி கோவில் நியாய விலை கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி பருப்பு சர்க்கரை போன்ற பொருட்கள் சேமித்து வைக்கும் சேமிப்புக் கிடங்கும் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இரண்டு சிறுத்தைகள் மின் ஊழியர்கள் வளர்த்து வரும் கோழி பூனை நாய் இரவு நேரங்களில் பிடித்து சென்று விடுகிறது.

மின் ஊழியர்கள் வேலை முடித்து தங்களது இல்லத்திற்குச் செல்லும் பொழுது சாலையில் முகம்மிட்டுள்ள சிறுத்தையைக் கண்டு அச்சமடைந்துள்ளனர். வீட்டிற்கு செல்ல முடியாமலும் அலுவலகத்திற்கு செல்லும் போதும் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று இரவு உதவி செயல் பொறியாளர் ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்தில் வேலை முடிந்து இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பும் பொழுது வளைவில் சிறுத்தை நிற்பதை கண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்தி கூச்சலிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து வந்த நான்கு சக்கர வாகன ஓட்டிகளையும் கூச்சல் லிட்டு வாகன ஒலி எழுப்பியதால் அணைப்பகுதியில் உள்ள புதருக்குள் சென்று மறைந்தது அச்சமடைந்த பொறியாளர் உடனடியாக வாகனத்தை எடுத்து சென்றார். பகல் நேரங்களிலேயே சுற்றித் திரியும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் என அனைவரும் அச்சமடைந்துள்ளனர். ஊழியர்களும் தோட்டத் தொழிலாளர்களும் வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து இரண்டு சிறுத்தைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.