உலக அளவில் பிரபலமான எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மர்ம நபர்கத்தியால் குத்திய நிலையில் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மானருஷ்டி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சல்மான ருஷ்டியை மேடையில் ஏறி மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார். கழுத்தில் படுகாயம் அடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல மணி நேர சிகிச்சைக்கு பின் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.