• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு

Byவிஷா

Nov 28, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரியில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கலந்தாய்வுக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில், தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 6244 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதிய நிலையில், தற்போது அடுத்த கட்டமாக தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு தயாராகி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 200 பேர், அடுத்தடுத்த நாட்களில் 200 பேர் என கலந்தாய்வுக்கு அழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு தாமதம் இன்றி உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்றும், அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் அதனுடன் அதன் நகல்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள், டிகிரி அல்லது ப்ரொஃபஷனல் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ், சிறப்பு கேட்டகிரியில் இருந்தால் அதற்கான சான்றிதழ்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.