• Sat. Apr 20th, 2024

தேசிய அளவிலான கட்டுரைபோட்டியில் திருநெல்வேலி மாணவிக்கு விருது

ByAlaguraja Palanichamy

Nov 29, 2022

இந்திய அளவில் கல்வி, தன்னம்பிக்கை, கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலால் கட்டுரை போட்டி தேசிய அளவில் நடத்தப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியினை முதல் நாள் நரேந்திர சிங் தோமர், மத்திய வேளாண் & விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். மற்றும் 2வது நாள் ஸ்ரீ தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் 30 மாநிலத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர். இந்திய அளவில் கொடுக்கப்பட்ட ஒரே தலைப்பு “என் கனவுகளின் தன்னிறைவு இந்தியா” . 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கட்டுரை எழுதும் போட்டி நடைப்பெற்றது. இதில் 500 வார்த்தைகளில் கட்டுரை இடம் பெற வேண்டும். இதில் தென் மாநிலங்களின் பள்ளிகள் அளவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலியை மாவட்டத்தை சேர்ந்த, செல்வி ஜெ. ஜெகத்ரியா, ஸ்ரீ சாரதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் படித்து வரும் மாணவிவெற்றி பெற்றார்.


டெல்லியில் நடைபெற்ற. விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர், அர்ஜூன் ராம் மெக்வால்,பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் கலாச்சார துறை அமைச்சரிடம் செல்வி ஜெ. ஜெகத்ரியா, இவ்விருதினை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ராஜீவ் சந்திரசேகர் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான மாநில அமைச்சர், நோபல் பரிசு பெற்ற கைலாஷ சத்யார்த்தி,இந்திய இந்து கலச்சார உறுப்பினர் அருண்குமார் , ஸ்ரீவினயாஜி, முனைவர். .பங்கஜ் மிட்டல், அனைத்து பல்கலைக்கழக சங்கத்தின் தலைவர். என்சிஇஆர்டி இயக்குனர், 80க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் மற்றும் 100 பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தென்னிந்திய மாநிலங்களில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவியான செல்வி ஜெ. ஜெகத்ரியா என்பவர் மட்டுமே வெற்றி பெற்று இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *