பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நகைக்காக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இன்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அதிமுக முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் மேலும் காவல்துறையினரிடம் இது தொடர்பான நிலவரங்கள் குறித்து கேட்டிருந்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் திருப்பூர் பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் அவற்றை தடுக்கும் வகையில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்கள் சார்ந்தோர் தங்கி வேலை செய்து வருவதாகவும் அதில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என்றும் அவர் கேட்டு அவர் கேட்டுக் கொண்டார் மேலும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் மேலும் அவருடன் பல்லடம் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் பல்லடம் அதிமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.







; ?>)
; ?>)
; ?>)
