• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

செம்மலை கவுண்டம்பாளையத்தில் கொடூரமான முறையில் கொலை

.பல்லடம் அருகே செம்மலை கவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த இரண்டு முதியவர்கள் மற்றும் மகன் உட்பட 3 பேர் கொடூரமான முறையில் கொலை- கொலை சம்பவம் நடந்த இடத்தில் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை…..திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மலை கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி அலமத்தால் ஆகிய தம்பதியினர் தங்களது தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்துக் கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளனர். அவரது மகன் செந்தில்குமார் ஐடி நிறுவனத்தில் கோவையில் பணியாற்றி வரும் நிலையில் அவர் தனது மனைவி கவிதா மற்றும் தனது மகன் மற்றும் மகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தெய்வசிகாமணியின் தோட்டத்து சாலைக்கு வந்ததாகவும் தெய்வசிகாமணியை தோட்டத்தில் வைத்து வெட்டியதாகவும் அதை தடுக்கச் சென்ற அலமத்தால் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரையும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை தெய்வசிகாமணியின் வீட்டிற்கு வந்த சவரத் தொழிலாளர் ஒருவர் மூன்று பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அவினாசி வளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி பாளையம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் தடவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரணம் என்ன என்பது குறித்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.