



கோவையில் மாடு முட்டியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்தனர். கோவை மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து சென்று நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாநகராட்சி 86 வார்டு புல்லுக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொழுகையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த பெண், அவரது உள்பட 5 மாத குழந்தையை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்தனர்.

தகவல் அறிந்து மனிதநேய மக்கள் கட்சியின் 86-வது கவுன்சிலர் அகமது கபீர் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டுக்கு சென்று குழந்தை மற்றும் தாயின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் உடனடியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சாலையில் சுற்றித் திரிந்து கொண்டு இருக்கும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஊழியர்களும் கோவை, புல்லுக்காடு பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து சென்றனர். மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

