கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு பயிற்சி, கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை தாங்க, தமிழ்த்துறை தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திருமேணி பங்கேற்று மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை மேம்படுத்தி சமுதாயத்தில் ஆளுமைத்திறன் மிக்கவர்களாக வரவேண்டும் என வாழ்த்தி பேசினார். இதனை தொடர்ந்து 3-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, நான் முதல்வன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணியன், கல்லூரி துறைத்தலைவர்கள் மணிகண்டன், தமிழ்செல்வன், வெங்கடாசலம், மணிசேகரன், ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.