உத்தரகாண்ட் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தின் கலெக்டர் ஆக இருப்பவர் 3.2 உயரமே உள்ள பெண் கலெக்டர் ஆர்த்தி டோக்ரா பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருவதால் உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
முடிந்தால், முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என்ற அடிப்படையில் உயரம், உயர்வுக்கு தடை இல்லை என்று என்பதை நிலைநாட்டும் வகையிலும் இந்தப் பெண், ஐஏஎஸ் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தற்போது ஒரு மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.எத்தனையோ பேர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் இருந்தும்,இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்று சொல்லக்கூடிய தாழ்வு மனப்பான்மையால் பல்வேறு உயரங்களை அடைய முடியாமல் சிகரங்களைத் தொட தொட முடியாமல் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.
ஆனால் ஒரு சிலரே மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கூட மனச் சோர்வு இன்றி முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு உழைத்து ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் பணியாற்றும் 3.2 அடி உயரமுள்ள ஆர்த்தி டோக்ரா அசத்தி வருகிறார் .இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தவர் .ஆர்த்தியின் தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். இளம் வயதில் மருத்துவர்கள் இவரால் படிக்க இயலாது என்று கூறிய நிலையில், மனம் தளராமல் டேராடூனில் உள்ள பெல்காம் பள்ளியில் படித்து, அதனை அடுத்து டெல்லியில் உள்ள ஸ்ரீராம் லேடி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து போய் இருப்பவர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.