• Thu. Feb 13th, 2025

சிந்தனை துளிகள்

Byவிஷா

Dec 9, 2021

1.துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.

  1. எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.
  2. நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி.. நாம் பிறருக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது.
  3. எதிலும் துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர்.
  4. இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். புகழ் ஓட்டமும் அதுபோலத்தான்.
    அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.
  5. உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது.
  6. நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே
    முடியும்.
  7. மனிதன் அடக்கம் என்ற போர்வையில், தன்னைப் போர்த்திக் கொள்ள
    வேண்டும்.
  8. நோய்களில் கொடிய நோய் மூடநம்பிக்கை என்ற நோய்தான்.
  9. மணிக்கணக்கில் பேசாமல், மணிமணியாக பேசுதல் சிறப்புடையது.