வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசுபவர்கள் பாஜகவினர் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலர் சங்க அரங்கில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க விழா நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி,
ஓராண்டு காலத்தில் அத்தனை துறைகளிலும் பல்வேறு வகையில் வேலைவாய்ப்பு, பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளோம்.கோடிக்கணக்கானை ரூபாய் நிதி மூலம் தொழிற்சாலைகளை உருவாக்கி தந்துள்ளோம்.என்னென்ன செய்தோம் என்பதை ஆதாரப்பூர்வமாக முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கினார். 10 ஆண்டு காலம் செய்ய முடியாததை ஓராண்டு காலத்தில் செய்துள்ளோம்.
மின்சாரம் கொடுக்க முடியவில்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள் என சி.டி ரவின் கருத்துக்கு
(பாஜக)எந்தந்த வகையில் இடையூறு செய்தாலும் அதையெல்லாம் முறியடித்து தான் ஓராண்டு காலத்தில் முதல்வர் பலபணி செய்துள்ளார்.மத்திய அரசு கொடுக்க வேண்டிய மின் பகிர்வை கொடுக்கவில்லை.இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின் பகிர்வு பற்றாக்குறை குறித்து முதல்வர் தெளிவாக சட்டப்பேரவையில் விளக்கியுள்ளார்.
வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசுபவர்கள் தான் அவர்கள். நல்லது செய்ய வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.எதிர்க்கட்சி தலைவர் துணைத்தலைவர் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.எதிர்க்கட்சித்தலைவர் தெரிந்துகொண்டே தெரியாதது போல பேசுகிறார்.
லூலூ மாலின் ஒரு செங்கல்லை கூட அனுமதிக்க மாட்டோம் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு ஏன் செங்கல்லை போய் பிடிக்க போறாரா? அண்ணாமலை என்னென்னமோ சொல்கிறார்.
இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்ய தீர்மானம் நிறைவேற்றி உதவிகளை செய்ய முன்வந்தவர் முதல்வர்.வாயில் சொல்வது எளிது ஆனால் சொன்னதை செய்பவர் முதல்வர்.
தமிழ்நாடு பங்கீடு நிதி 1ரூபாய் பெற்றுக்கொண்டு 35 பைசா கொடுக்கின்றனர். வணிகவரித்துறையில் முழுமையான வரி வருவாயை கொடுத்தாலே தமிழக அரசு இன்னும் சேவை செய்யும்.தமிழக பணத்தை பெற்றுக்கொண்டு அதை திருப்பிக்கொடுக்காமல் இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்வது வெறும் பேச்சு மட்டுமே. இன்னும் மத்திய அரசு 28ஆயிரம் கோடியை தர வேண்டிய நிதியை இன்னும் தரவில்லை
பத்தாண்டுகளில் 6 லட்சம் கோடி கடன் வைத்து சென்றுவிட்டனர் . அதற்கு வட்டியும், கடனும் கட்டிக்கொண்டுள்ளோம். முதலமைச்சர் இந்த1 ஆண்டில் பல சாதனைகளை செய்துள்ளார். அதற்கு இணையா அவர்கள் என்ன செய்தார்கள் என சட்டமன்றத்தில் பேச சொல்லுங்கள்.
இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேட்டியளித்தார்.