• Fri. Mar 29th, 2024

உண்மையில் நடந்தது இது தான்.. – மனம் திறக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் !

Byமதி

Sep 29, 2021 ,

உண்மையில் நடந்தது இது தான்.. – மனம் திறக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் !

விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடந்த வழக்கில் உண்மையின் பின்னணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார்.

அதில், விஜய்யை நான் தான் 1992 ல் அறிமுகப்படுத்தினேன். படிப்படியாக அவரை ஒரு முழு நாயகனாக மாற்றினேன்.
விஜய் பெரிய நடசத்திரமாக வளர ஆரம்பித்தவுடன், எனக்கு இருந்த ரசிகர் மன்றத்தை விஜய் ரசிகர் மன்றமாக மாற்றினேன். சிறிது காலம் கழித்து
நற்பணிகள் நிறைய செய்து வருகிறோம், அதனால் ரசிகர் மன்றத்தை விஜய் நற்பணி மன்றமாக மாற்றலாம் என மாற்றினோம்.

நகரங்களில் மட்டும் இருந்தால் பத்தாது என கிராமம் முழுவதும் போய் கிளைகளை உருவாக்கினோம். இதற்கிடையில் விஜய் 7,8 படங்கள் செய்து விட்டார். அவரது இயக்கத்திற்கு அவரே தலைவராக இருந்தால் நன்றாக இருக்காது என்பதால்.. நான் தலைவராகவும், எனது மனைவி ஷோபா பொருளாளராகவும் மற்றும் சிலர் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு மக்கள் இயக்கம் செயல்பட்டது. இது அவர் சம்மதத்தின் பேரில் இது நடந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக விஜய்யும் வளர்ந்தார். அவர் தமிழ் சினிமாவில் உயர்ந்த நட்சத்திரமாக வளர ஆரம்பித்தவுடனே, நான் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுகிறேன், நீ நடிப்பு வேலையை மட்டும் பார். யாரவது கேட்டால் இதற்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிடு, என்று அவரிடம் சொல்லிவிட்டு, அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்த பிறகு தான் விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் இயக்கமாக மாற்றும் வேலையாக டெல்லிக்கு சென்று கட்சியை பதிவு செய்தேன்.

இந்த நேரத்தில் தான், விஜய் பக்கம் இருந்து இதை மறுத்து அறிக்கை வந்தது. அது எனக்கே அதிர்ச்சி தான். பாண்டிச்சேரியில் விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்த மூர்த்தி ஆனந்தை மொத்த தமிழ்நாட்டுக்கும் தலைவராக நியமித்தேன். அவர் வந்த பிறகு எனக்கும் விஜய்க்குமான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் விஜய்யும் நானும் பேசிக்கொள்வதில்லை. விஜய் பக்கம் இருந்து வந்த அறிக்கை அவரை கட்டாயத்தின் பேரில் கொடுக்க வைத்த அறிக்கை. விஜய் விருப்பத்துடன் தான் நான் இந்த பணிகளை செய்தேன். நான் அதைச் செய்தாலும் விஜய்யின் நன்மை கருதியே செய்தேன்.

இப்போது அவருக்கும் எனக்குமான இடைவெளியை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். விஜய் பின்னால் அரசியலுக்கு வரும்போது அவருக்கான பாதை சரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான், இந்த பணிகளை அவரிடம் சொல்லிவிட்டு செய்தேன். ஆனால் எப்போது அவரிடம் இருந்து, மறுப்பு வந்ததோ அதை உடனடியாக என் தலைமையில் இயங்கிய இயக்கத்தை மொத்தமாக கலைத்து விட்டேன். எக்காலத்திலும் விஜய்க்கு எதிராக செயல்படுவது என் நோக்கமல்ல. என் தலைமையில் இயங்கி வந்த இயக்கதை கலைத்தாகிவிட்டது, இனி நான் இயக்கத்தில் இல்லை அரசியலிலும் இனி இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *