உசிலம்பட்டியில் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரி, கோரிக்கை அட்டை அணிந்து ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் – வரும் சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர், அரசு ஊழியர்களின் அதிருப்தியை இந்த அரசு சந்திக்கும்., – என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுச் செயலாளர் முருகன் பேட்டி

2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரி, வருவாய்த்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் முருகன் மற்றும் ஜாக்டோ ஜூயோ மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
அரசு ஊழியர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இணைந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் முருகன்,

நாங்கள் புதிய கோரிக்கைகள் எதையும் கேட்கவில்லை, திமுக அரசு தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.,
பல்வேறு போராட்டங்களின் முடிவில் அழைத்து பேசி எழுத்து பூர்வமாகவும், வாய்மொழி உத்தரவாகவும் திமுக அரசு அளித்த உத்திரவாததை நிறைவேற்ற வேண்டும்.,
இல்லையென்றால் வரும் சட்டமன்ற தேர்தல் வரை ஜாக்டோ ஜூயோ தொடர்ந்து போராடும், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர், அரசு ஊழியர்களின் அதிருப்தியை இந்த அரசு சந்திக்கும்.,
எங்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசானை 243 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.,
அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்கள் மட்டுமல்லாது, உயர்மட்ட குழு கூடி சிறை நிரப்பும் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிவிப்போம் என பேட்டியளித்தார்.,