• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மதுரை திருப்பரங்குன்றம் தைப்பூச விழா MLA பேட்டி..,

ByKalamegam Viswanathan

Feb 1, 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர் சந்திப்பு ..

தைப்பூச திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது திருப்பரங்குன்றத்தில் முருகனின் அருளால் எடப்பாடி யார் மீண்டும் ஆட்சி அமைப்பார் தைப்பூச திருநாள் மிகவும் சிறப்புகுறியது முருகனின் அருளை பெற்ற நாள் முருகப் பக்தர்கள் தமிழ் கடவுள் முருகன் முருகன் ஆண்டாண்டு காலமாக தைப்பூச .திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

தைப்பூசத் திருநாளிற்கு எடப்பாடி விடுமுறை தினமாக அறிவித்தார். தைப்பூசத் திருநாள் முருகனின் வழிபாட்டுத் தினம் மட்டுமல்ல தமிழக மக்களின் முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பக்தர்களும் ஒன்று கூடுகின்ற நாள்.

அதனை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு?

இன்று பக்தர்கள் பெருங்கூட்டமாக காணப்படுகிறது எதிர்பார்க்க கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு காவல்துறை சிறப்பாக செய்யும் என நினைக்கிறேன் வழக்கமாக எதிர்பார்த்த விட இந்த ஆண்டு கூட்டம் அதிகமாக உள்ளது.

மேலும் இன்று பௌர்ணமி தினம் என்பதால் கிரிவலம் சுற்றுவதற்காக ஏராள மக்கள் வந்துள்ளனர்.

பெருங்கூடத்தை பாதுகாப்பாக கட்டுப்படுத்துவதில் காவல்துறை தவற மாட்டார்கள் என நினைக்கிறேன்.

பக்தர்களுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்த கேள்விக்கு.?

திருப்பரங்குன்றம் முக்கியத்துவத்தை இன்றைக்கு அரசியல் செய்ய விரும்பவில்லை பழனியில் பேருந்து கட்டணம் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை இனி வருகின்ற அரசு இதனை சிறப்பாக செய்யும் இந்த மக்களுக்கு தேவையான பாதுகாப்பு உணவு பொதுவாழ்வில் இருக்கின்ற செய்து கொண்டிருக்கிறார்கள் தனிப்பட்ட முறையில் நாங்களும் செய்ய தயாராக உள்ளோம்.

அனைவரின் பங்கும் இடம்பெற வேண்டும் என்பதால் அடுத்த ஆண்டு பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் பாதுகாப்பு போன்றவற்றை சிறப்பாக செய்ய தயாராக உள்ளோம் இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக முருக பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மாவட்ட நிர்வாகம் திருக்கோவில் நிர்வாகம்செய்ய வேண்டுகிறோம்.

இன்று பௌர்ணமி மட்டுமல்ல இன்று ஒரு சிறப்பு நாள் ஏற்பட்டுள்ளது தமிழக மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் சிறப்பு பெற்ற பெருநாள் தைப்பூசத் திருநாள் அதை வரவேற்போம் எனக் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா கூறினார் .