• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அக்னி சட்டி எடுத்து தனது நேர்த்திக் கடனை செலுத்திய நடிகர் சௌந்திரராஜா.,

ByP.Thangapandi

Oct 17, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் சௌந்தி்ரராஜா, தவெக தலைவர் விஜய்-ன் ஆதரவாளரான இவர், சுந்தரபாண்டியன் முதல் பூவையார் நடித்துள்ள ராம் அப்துல்லா ஆண்டனி வரை குணச்சித்திர நடிகராகவும் பயணித்து வருகிறார்.,

இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நடிகர் சௌந்திர ராஜாவின் சொந்த ஊரில் இன்று முதல் அந்த ஊரில் உள்ள கௌமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.,

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வில், நடிகர் சௌந்திர ராஜ் -ம் கலந்து கொண்டு தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.,

அருள் இறங்கி வெறும் கைகளாலேயே தீ சட்டியை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்த சௌந்திர ராஜா விற்கு உறவினர்கள் மாலை அணிவித்தும் மஞ்சள் நீர் ஊற்றியும் நெகிழ்ச்சியடைந்தனர்.,