• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தைப்பூச திருவிழா செம்பு முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு..,

ByS.Ariyanayagam

Feb 1, 2026

தைப்பூச திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் மட்டுமன்றி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாதாள செம்பு முருகனை தரிசனம் செய்தனர்.

பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.