

திருவேடகத்தில் அமைந்துளள விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள கலியுகத்தில் கேட்ட வரம் கொடுக்கும் கண்கண்ட தெய்வமாகி அருள்பாலிக்கும் கிராம தேவதை கேட்ட வரமும் கிடைக்கும் நினைத்த காரியமும் ஜெயமாகும் ஸ்தலமான விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் 29 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. முதல் மூன்று நாட்கள் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.இதைத் தொடர்ந்து 4ம் நாள் திருவிளக்கு பூஜையும், 5ஆம் நாள் அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்று பூச்சொரிதல் விழா நடந்தது.6ம் நாள்,7ம் நாள் சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. 8ம் நாள் காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். 9 ஆம் நாள் அம்மனுக்கு சந்தன காப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் வீதி உலா நடந்தது. பூசாரி துரை மணிகண்டன் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. 10ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று கிடாய் வெட்டுதல் நடந்தது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

