• Wed. Dec 11th, 2024

இந்தியில் தயாராகும் ‘திருட்டு பயலே 2’

Byமதி

Oct 19, 2021

தமிழில் ‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ‘கந்தசாமி’ , ‘திருட்டுப்பயலே’ உட்பட ஏராளமான மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிகணேசன். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தரமான படைப்புகளைக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சமீபத்தில் ரிலீஸான ‘திருட்டுப்பயலே – 2’ படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இந்தியில், ‘தில் ஹே கிரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் இதன் அர்த்தம், இதயத்தின் நிறம் சாம்பல்.

இந்த உலகத்தில் வெள்ளை மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். கறுப்பு மனம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். கிரே இதயம் என்றால் வெள்ளை, கறுப்பு என இரண்டும் கலந்தது. அப்படி ஒரு கிரே இதயம் படைத்த மனிதர்களின் கதையைத் தனித்துவமாக இதில் சொல்லியுள்ளார்கள்.

ஹீரோவாக வினித் குமார் சிங், ஹீரோயினாக ஊர்வசி ரெளத்தேலா நடிக்கிறார்கள். வில்லனாக பிரசன்னா நடித்த பாத்திரத்தில் அக்‌ஷய் ஒப்ராய் நடிக்கிறார். நாயகியின் அம்மாவாக சீதா மூலம் முதன் முறையாக இந்தியில் அறிமுகமாகிறார். இவர்களுடன், இயக்குநர் சுசி கணேசன் உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தமிழில் இவர் நடித்த துப்பறியும் வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். இது தவிர, ஏராளமான பாலிவுட் முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள்.

சுசி கணேசனின் இரண்டாவது பாலிவுட் படைப்பாக வெளிவரவுள்ள இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.