தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மேலும், தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலும் நீண்டு வருகிறது.
அந்த வகையில் ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’, சூர்யாவின் ‘ஜெய் பீம்’, விஷால் நடிப்பில் ‘எனிமி’,, அருண்விஜய்யின் ‘வா டீல்’, ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிருணாளினி மற்றும் பலர் நடிப்பில்,
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற ஹிட் படங்களைத் கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர்.மகன். பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாவது குறிப்பிடதக்கது.