• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சி டி ஆர் நிர்மல் குமாரிடம் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் கோரிக்கை மனு..,

ByKalamegam Viswanathan

Jun 7, 2026

திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது தமிழக அரசு மாற்றதிற்கு பின்பு கடந்த இரண்டு தினங்கள் முன்பாக மின்சார சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு முன்பு இரண்டு வருடத்திற்கு முன்பாக எப்படி நடைபெற்றதோ அப்படியே இருக்கும் இதுதான் அரசின் கொள்கை என தெரிவித்த நிலையில் தற்போது இன்று காலை திருநகர் பாண்டியன் நகரில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் மருது தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார்.

அப்போது அமைச்சர் இடம் திருப்பரங்குன்றம் கிராமம் பொதுமக்கள் சார்பாக திருப்பரங்குன்றம் மலைமீது உயர்நீதி மன்றத்தின் உத்தரவுபடி தீபம் ஏற்ற வேண்டும் மற்றும் தற்போது நடைபெற்ற மொட்டை அரசு திருவிழாவில் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை மீட்க வேண்டும் கோரிக்கை வைத்தால் இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது அதை வாங்கிக் கொண்டு அமைச்சர் எந்த பதிலும் கூறாமல் சென்று விட்டார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சில மாதங்களாக ஓய்ந்திருந்த சூழலில் தற்போது அமைச்சர் நேற்று கூறியதற்கு இன்று மக்கள் மனு அளித்துள்ளதால் திருப்பரங்குன்றம் மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.