• Tue. Apr 16th, 2024

அரங்கம் தெறிக்க சிவகாசியில் பேசிய எடப்பாடி பழனிசாமி

Byகாயத்ரி

Feb 7, 2022

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 21 மாநகராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 7-ஆம் தேதியான இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பிலும் அதனுடைய கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிவகாசியில் தொடங்கி பேசி வருகிறார்.அவர் பேசியதாவது:

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திமுக அரசு பல காரணங்களுக்காக காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தது. பின் உச்ச நீதிமன்ற அறிவிப்பின் படி தற்போது நடத்துகிறது.8 மாதமாக எந்த ஒரு நல திட்டங்களையும் இந்த திமுக ஆட்சி செய்யவில்லை.அதிமுக அரசு இருந்த போது துவங்கப்பட்ட திட்டங்கள் தான் தற்போது முடித்து, அதை தான் திமுக அரசு திறந்து வருகிறது.

தினமும் காலையில் 3 இடங்களுக்கு செல்கிறார் ஸ்டாலின். பின் அங்குள்ள டீ கடையில் குடிக்கிறார். டீ குடிப்பதற்கு, வலு தூகுவதற்கு, சைக்கிளில் செல்வதற்குமா உங்களை மக்கள் முதல்வராக்கி உள்ளனர் என்று விளாசினர்.இன்றைய ஆட்சியாளர்கள் கொள்ளை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.இவர்களின் தரம் பொங்கல் தொகுப்பிலே தெரிந்துவிட்டது.பொங்கல் பரிசு எனஅறு பேரில் தரமற்ற பொருட்களை கொடுத்து மக்களை ஏமாற்றியது.சிறப்பான தரமான பொருட்கள் மற்றும் ரூபாய் கொடுத்தது அம்மா அரசு தான்.

5000 ஆயிரம் கொடுக்க சொன்னா ஸ்டாலின் இந்த முறை 100 ரூ அட்டைக்கு கொடுத்தாராம்? இந்த பொங்கல் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள் ஆளானார்கள். திமுக அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம். இந்த அரசிடம் நாம் நியாத்தை எதிர்பார்க்க முடியாது.

கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுக மீது பொய் வழக்கு போடுவது வாடிக்கை ஆகிவிட்டது. எல்லா வழக்குகளையும் சந்திக்கும் சக்தி அதிமுகவிற்கு உண்டு.முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தற்போது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பணத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்திருக்கலாம். அதை பற்றி முழுதாக ஆராய்ந்து பாராமல் பொய் வழக்கு ஒன்றை போட்டு வைத்திருக்கிறார்கள்.

8 மாதங்களில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து இருக்கிறது. எங்கும் கொலை, கொள்ளை தான் நடந்து வருகிறது.ஒரு பொம்மை போல் முதலமைச்சர் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.முதலமைச்சர் மக்களுக்காக வேலை பார்க்காமல் சொந்த வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார். பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டிருந்த போது சம்பந்த பட்ட அமைச்சரை ராஜேந்திர பாலாஜியுடன் 20 அமைச்சர் இணைந்து சந்தித்து சரி செய்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள்.ஆனால் இது வரை அதை செய்யவில்லை.அதற்கான சாத்திய கூறும் தெரியவில்லை. குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாக அறிக்கை விடுத்து 8 மாதம் ஆகியும் வழங்கவில்லை.நகை கடன் வாங்கிய 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் தான் தகுதியானவர்கள் என்று அறிவித்து விட்டார்கள். ஆனால் 35 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டு தற்போது கூடுதல் வட்டியை செலுத்தி வருகிறார்கள். 35 லட்சம் பேர் ஏமாற்ற பட்டிருக்கிறார்கள்.

இப்படி பல அறிக்கைகளை வெறும் பேச்சாக மட்டுமே பேசி அதை செயல் முறையில் கொண்டுவராமல் ஏமாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று அனல் பறக்க பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *