• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை 93 இலட்சம் வருமானம்..,

ByKalamegam Viswanathan

Jun 25, 2026

ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடாகும் திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர உண்டியல் எண்ணும் பணி தற்போது இரண்டு மாதத்திற்கு பின்பு இன்று காலை திருக்கோயில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் உண்டியல் வருமானம் 93 இலட்சத்து 19 ஆயிரத்து 243 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

தங்கம் 234 கிராமும் வெள்ளி 4 கிலோ 324 கிராமும் கிடைத்துள்ளது.

இந்த உண்டியல் என்னும் பணியில் கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

இதில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பேரவை பக்தர்கள், கோவில் தேவஸ்தான பள்ளி மாணவிகள், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவிகள், உள்ளிட்ட மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.