• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குடியிருப்பு நல சங்கத்தை திறந்து வைத்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா..,

ByKalamegam Viswanathan

Oct 25, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி விமான நிலைய சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நகர் குடியிருப்பு சங்க பலகையை திறந்து வைத்தார் எம். எல். ஏ. ராஜன் செல்லப்பா.

மதுரை விமான நிலைய சாலை பெருங்குடி பகுதியில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நகர் பகுதியில் அதிக திருட்டுக்கள் இந்த பகுதியில் நடைபெறுவதாக அந்த பகுதி பொதுமக்கள் குடியிருப்பு நல சங்கம் என்ற ஒன்று ஆரம்பித்து அதனை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று திறந்து வைத்தார். மேலும் தங்களது பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அனைத்து மனு அளிக்கும் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல் கட்டமாக சாலை வசதி செய்து தர ஆய்வு பணிகளை நடத்தி விரைவில் சாலை அமைத்து தரஏற்பாடு செய்யப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன் மேலும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.