• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருமாவளவனின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் விஜயபாலன் தலைமையில் மணிவிழா சிறப்பு பொதுக்கூட்டம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 60வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட செயலாளர் விஜயபாலன் தலைமையில் பெருந்துறை பங்களா வீதியில் மணிவிழா சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெருந்துறை ஒன்றிய செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார், நகரத் துணைச் செயலாளர் பார்த்திபன் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிபிச்சந்தர், கோவை நீலகிரி மண்டல செயலாளர் சுசி கலையரசன், ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் வளவன் வாசுதேவன், அம்பேத்கர், சாதிக், சிந்தனைச் செல்வன், திமுகவின் ஒன்றிய செயலாளர் கே. பி. சாமி, ராஜேந்திரன், ராவுத் குமார், பழ சண்முகம், தம்பி முருகானந்தம், மிசா தங்கவேல், வெங்கடேஷ், நந்தகுமார், சிறுத்தை தமிழ்ச்செல்வி, ஜோஸ்வா ஸ்டீபன், பாஸ்டர் காலேப் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர் . இறுதியாக பெருந்துறை ஒன்றிய துணைச் செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியுரையாற்றினார்.