அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி, ஒன்பதாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு அங்கு குடியிருந்த அவர்கள் கூடுவாஞ்சேரி தைலாபுரம் பெரும்பாக்கம் புதிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியத்தின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

தாய் மூகாம்பிகை நகர் சத்யா நகர் மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில் காயிதே மில்லத் நகர் ஸ்டாலின் நகர் பகுதிகள் இன்று அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதி மக்களை சந்திக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் வருகை தந்துள்ளார்.
அவரிடம் அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து வருகின்றனர். ஒன்பதாவது நாட்களாக நடைபெற்று வரும் இந்த ஆக்கிரமிப்பு மற்றும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று அகற்றப்படும் பகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பகுதி மக்களை சந்தித்து பேசி வருகிறார்.