பூனை பற்றி அறியாத பல தகவல்கள்!!
பூனையின் கண் பார்வை மனிதனை விட 8 மடங்கு கூர்மையானது. பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. பூனைகள் பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால், அவைகளை பொதுவாக எகிப்தியர்கள் வீட்டில் வளர்த்து வணங்கினர். பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர். அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும். பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப் புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ் நாளாந்தம். 12-16 மணி நேரம் உறங்கும் தன்மை கொண்டது பூனை. சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 – 39 °C (101 – 102.2 °F) வரை காணப்படும்.
பூனைகள் விரைவான இனப்பெருக்க விகிதம் கொண்டவை. மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தம் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகளின் உடல் நுழையும். முன்னங்கால்களிலில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் இருந்து நான்கு நகங்களும் பூனைகள் கொண்டு இருக்கும். பூனைகள் நடக்கும் போது ஓசை கடத்தாமலிருக்கும் வகையில் மெத்தை போன்ற பாத அமைப்பை பெற்றுள்ளது. நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது. மரபணு மற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன. மற்ற சுவைகளை பூனைகள் அறியும். பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளை சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.
பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஓர் ஊனுண்ணி ஆகும். பூனைகள் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன.உலகில் நாய்களுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மனிதர்களால் விரும்பி வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாக பூனைகள் உள்ளன. பூனைகளைப் பற்றி நீங்கள் இதுவரைக்கும் அறியாத சில மிகவும் சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
100 விதமான மியோவ்!
நாய்கள் கிட்டத்தட்ட பத்து விதமான ஒலிகளை மட்டுமே வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை ஆகும்.ஆனால் பூனைகள் கிட்டத்தட்ட 100 விதமான ஒலியை (மியோவ்) அவைகளின் வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை என்ற சுவாரசியமான உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு பூனையும் மியோவ் ஒலியை மற்ற பூனைகளுடன் தொடர்புகொள்ள பயன்படுத்தாது.பூனைகள் எழுப்பும் மியோவ் ஒலியானது மனிதர்களுடன் தொடர்புகொள்ளவும்,அவைகளின் உணர்ச்சியை மனிதர்களிடம் வெளிப்படுத்திக்கொள்ளவும் மட்டுமே ஆகும்.
ஆயுட்காலம்
பூனைகள் சராசரியாக 12 முதல் 15 ஆண்டுகள் வரை வாழக் கூடிய உயிரினம் ஆகும்.
500 மில்லியன் பூனைகள்
உலகம் முழுக்க இன்றைக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் வீட்டுப் பூனைகள் வாழ்கின்றன. இவை கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பூனை இனங்களை சேர்ந்தவையாகும்.
கேட்கும் திறன்
நாய்களை விட பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானதாகும்.ஏன்…! மனிதர்களை விடவும் பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்! ஆம்… மனிதர்களை விடவும் பூனைகள் கேட்கும் திறன் அதிகம் உடையவை என்ற வியப்பூட்டும் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
பூனைகளின் தூக்கம்
பூனைகள் அதன் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்நாளை தூங்குவதற்காக மட்டுமே செலவு செய்கின்றன. அதாவது 12 வருடம் ஒரு பூனை வாழ்கின்றது என்றால் அந்தப் பூனை அதில் வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே விழித்துக்கொண்டு இருக்கும்.
நிலநடுக்கம் உருவாகும் முன்பே கணிக்கும் பூனைகள்!
பூனைகள் அதிர்வுகளை உணரும் அசாத்திய திறன் படைத்த உயிரினம் ஆகும்.நில நடுக்கம் உருவாகுவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் முன்பே நிலநடுக்கம் உருவாகுவதை பூனைகள் உணர்ந்து விடும்.
இதயத்துடிப்பு
மனிதர்களின் இதயத்துடிப்பை விட பூனைகளின் இதயத்துடிப்பு ஒரு மடங்கு அதிகமானதாகும்.ஒரு நிமிடத்தில் பூனைகளின் இதயம் சராசரியாக 120 முதல் 140 வரை துடிக்கும்.
ஹிட்டரையே பயப்படுத்நிய பூனை!
பூனைகளை அதிகம் விரும்பும் மனிதர்களை அறிவியல் பூர்வமாக Ailurophilia என்று கூறுவர். இதேபோல பூனைகளைப் பார்த்தாலே பயப்படும் இயல்பு கொண்டவர்களை அறிவியல் பூர்வமாக Ailurophobia என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுவர்.
உயரமாக துள்ளும் பூனைகள்!
பூனைகள் அவற்றின் உடல் நீளத்தை விட ஐந்து மடங்கு அதிகமான உயரம் வரை துள்ளிக்குதிக்கும் வியத்தகு திறன் உடையவை ஆகும்.
காதுகளை சுற்றுதல்
பூனைகள் அவைகளின் காதுகளை 180 டிகிரி வரை சுற்றும் திறன் உடையவை ஆகும்.

அழகு படுத்துதல்
ஒரு நாளைக்கு பூனைகள் சுமார் ஐந்து மணி நேரங்களை அவைகளின் உடலை தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவும்,அழகுபடுத்திக் கொள்வதற்காகவும் செலவு செய்கின்றன என்ற சுவாரஸ்யமான உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
பூனை இறைச்சி
ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தில் ஒரு வருடத்தில் 4 மில்லியன் பூனைகள் கொல்லப்பட்டு இறைச்சியாக உண்ணப்படுகின்றன என்பது ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.
பூனைகளிடம் கடி வாங்கும் அமெரிக்கர்கள்!
ஒரு வருடத்தில் சராசரியாக 40 ஆயிரம் அமெரிக்கர்கள் பூனைகளால் கடிக்கப்படுகிறார்கள்.
பூனைக்கு எத்தனை எலும்புகள்?
மனிதர்களை விட பூனைகளின் உடலில் அதிக எலும்புகள் உள்ளன.மனித உடல் மொத்தம் 206 எலும்புகளுடன் ஆனது.ஆனால் இதைவிட அதிகமாக பூனைகளின் உடலில் மொத்தம் 230 எலும்புகள் உள்ளன என்ற பூனைகள் பற்றிய ஒரு சுவாரசியமான உண்மை.
எகிப்திய கலாச்சாரத்தில் பூனைகள்
பண்டைய எகிப்திய கலாச்சாரத்தில் பூனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினமாக கருதப்பட்டன.பண்டைய எகிப்தியர்கள், மனித உடல் மற்றும் பூனையின் தலை கொண்ட பாஸ்டெட் என்ற ஒரு பெண் கடவுளை வழிபட்டனர்.பண்டைய எகிப்தில் பூனைகளை காயப்படுத்துவது என்பது கடுமையான தண்டனைக்குரிய ஒரு மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது.
இனிப்பை உணராதவை
பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது.
கருப்பு பூனைகள்
ஜப்பான் நாட்டில் கருப்பு நிற பூனைகளை பார்ப்பது அதிர்ஷ்டத்தின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு சென்ற பூனை
1963 ஆம் ஆண்டில் பெலிஸெட் என்று பெயர் கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பூனை விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுதான் நாம் செல்லமாக வளர்க்கும் பூனையை பற்றி தெரியாத பல விஷயங்கள். இந்த பதிவின் மூலம் உங்கள் பூனையிடம் நீங்கள் எப்படி பழகப்போகிறீர்கள் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: