• Sat. Feb 15th, 2025

சிவகாசி-ல் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்

ByK Kaliraj

Feb 3, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சங்கு வளையல்கள், மண்பாண்ட பொருட்கள், பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்கள், சேரா நாட்டு செப்பு காசுகள், கண்ணாடி மணிகள், கல்மணிகள், சுடுமண் முத்திரைகள், மண் குவளைகள், அயல்நாட்டு வணிகத்திற்கு பயன்படுத்தப்பட்ட சுடுமண் முத்திரைகள், சில்லு வட்டுகள், பெண்கள் பாண்டி விளையாட்டிற்கு பயன்படுத்திய வட்ட சில்லுகள் உள்பட 3,200 க்கு மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் நாளை செவ்வாய்க்கிழமை கூடுதலாக அகழாய்வு குழிகள் தோண்டப்பட உள்ளது. அதிலும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.