• Sat. Feb 15th, 2025

மாணவர்களுக்கு வாழ்த்து சொன்ன கே.டி.ராஜேந்திர பாலாஜி

ByK Kaliraj

Feb 4, 2025

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட 240 மாணவ , மாணவியர்களில் மும்பை அசோசியேசன் மூலம் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்ற மாணவ மாணவிகள், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே .டி. ராஜேந்திர பாலாஜியை சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பாராட்டி இது போன்று விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு பல்வேறு சாதனைகளை புரிந்து அதன் மூலம் படித்து வரும் பள்ளிக்கும், பிறந்த ஊருக்கும் ,பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.