கொரோனா தொற்றின் காரணமாக ஏழை எளிய மக்கள் வேலை இல்லா திண்டாட்டத்தினால் மிகவும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக ஏழை, எளிய மக்களுக்காக அரசு இலவச குடும்ப அட்டைகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் இலவச குடும்ப அட்டைகளை தகுதி இல்லாத நபர்கள் பயன்படுத்துவதாக தற்போது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் தகுதி இல்லாத நபர்கள் தாமாக முன்வந்து குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் குடும்ப அட்டைகளை ரத்து செய்யாமல் வைத்திருப்பவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடும்ப அட்டையை ரத்து செய்வார்கள்.
அதாவது 100 சதுர மீட்டருக்கு அதிகமாக பரப்பளவில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள், கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாயாக இருத்தல், நகர்ப்புறங்களில் ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வைத்திருப்பவர்கள் போன்றவர்களுக்கு இலவச குடும்ப அட்டை வழங்கப்பட மாட்டாது. இவர்கள் இலவச குடும்ப அட்டை வைத்திருந்தால் அதை உடனடியாக தாலுகா அலுவலகத்தில் அல்லது டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்டவர்கள் குடும்ப அட்டையை ஒப்படைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படுவதுடன் குடும்பத்தினர் அனைவரின் மீதும் சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் இதுவரை இலவச குடும்ப அட்டை மூலமாக பெற்ற பொருட்களுக்கான பணமும் வசூலிக்கப்படும்.