• Thu. Dec 5th, 2024

வாசிக்கும் போதே மயங்கி விழுந்த செய்தி வாசிப்பாளர்

Byவிஷா

Apr 22, 2024

மேற்கு வங்காளத்தில் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. அதிகரித்து வரும் வெப்பம் மேலும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேற்குவங்காளத்தில், கொல்கத்தாவில் நடைப்பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தொலைக்காட்சி ஊடகமான தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஏப்ரல் 18 அன்று காலை பெங்காலி மொழியில் செய்தி வாசித்து கொண்டிருந்தபோதே செய்தி வாசிப்பாளர் லோபமுத்ரா சின்ஹா மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், நேரலையிலேயே அவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது சமுக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அன்றைய தினம் மிகுந்த வெப்பமாக இருந்தது.எனது ரத்த அழுத்தம் மிகக்குறைவாக இருந்தது. நான் மயக்கம் அடைவதற்கு முன்னரே எனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது.
அப்போது, தண்ணீர் அருந்தினால் சரியாக இருக்கும் என்று நினைத்து, அந்த ஃப்லோரின் மேஜேனரிடம் கேட்டேன். என்றைக்கும் இல்லாமல் அன்றைய நாளில் பொது பிரிவில் அதிக அளவில் செய்திகள் இருந்தது. செய்திகளுக்கு இடையே எந்த காணொளியும்,படங்களும் இல்லாமல் இருந்தது. அப்படி, இருந்திருந்தால், அந்த நேரத்திலாவது நான் தண்ணீர் அருந்தி இருப்பேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், 21 வருடங்களாக செய்தி வாசிப்பின்போது, தன் அருகில் தண்ணீர் வைத்து கொள்ளமாட்டாரம் சின்ஹா. ஏனெனில், செய்தி வாசிப்பதற்கு 30 நிமிடங்கள் வரை மட்டுமே ஆகும் என்பதால், தன் அருகில் தண்ணீர் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ தினத்தில் மட்டும் மேற்கு வங்காளத்தில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *